ஜலகண்டாபுரம்: மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
ஜலகண்டாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் ஜலகண்டாபுரம்-தாரமங்கலம் சாலையில் செலவடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை அதன் டிரைவர், போலீசாரை கண்டதும் நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் வனவாசி பகுதியை சேர்ந்த டிரைவர் பழனிசாமி (வயது 32) என்பதும், அரசு அனுமதியின்றி டிப்பர் லாரியில் தேவூர் பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார், மணல் கடத்த பயன்படுத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்ததுடன், டிரைவர் பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.