தமிழகம் முழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்யும் தொண்டர்
தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு கேட்டு தொண்டர் ஒருவர் தமிழகம் முழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
திருச்சி, பிப்.20-
திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவி. ஓட்டல் நடத்தி வரும் இவர், கடந்த 30 ஆண்டுகளாக தி.மு.க.வில் தொண்டராக உள்ளார். இவர் வருகிற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு கேட்டு தமிழகம் முழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த ஜனவரி 23-ந் தேதி அவர் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கொடியை சைக்கிளில் கட்டியபடி பிரசார பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சைக்கிளிலேயே சுற்றுப்பயணம் செய்த அவர், பொதுமக்களிடம் துண்டு பிரசுரமும் வினியோகம் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று திருச்சி வந்த சஞ்சீவி கூறுகையில், “தி.மு.க. தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக பிரசாரத்தை தொடங்கி இதுவரை பல்வேறு ஊர்களுக்கு சென்று வந்துள்ளேன். அடுத்து திருச்சியில் இருந்து தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு சென்னை செல்கிறேன்” என்றார்.