வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்

வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2021-02-19 20:54 GMT
கரூர்
10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த 17-ந் தேதி முதல் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3-வது நாளாக நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில், மாவட்டச் செயலாளர் ஜெயவேல் காந்தன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்