சோழவந்தான்,பிப்
சோழவந்தான் அருகே குருவித்துறை வேட்டார்குளம் அருகில் உள்ள ஆதிமாசாணி அம்மன் கோவிலில் கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. கடந்த 17-ந்தேதி இரவு 12 மணியளவில் மயான பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை வைகை ஆற்றிலிருந்து பக்தர்கள் மாசாணியம்மன் சக்தி கரகம் எடுத்து வந்தனர். நேற்று அதிகாலை பூக்குழி திருவிழா நடைபெற்றது. முதலில் பூசாரி பூக்குழியில் இறங்கியவுடன் பக்தர்கள் வரிசையாக இறங்கி வந்தனர். பக்தர்கள் பக்தி கோஷமிட்டனர். பின்னர் மாசாணி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்படடது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை பெண்கள் முளைப்பாரி எடுத்து கிராமத்தில் வலம் வந்து வைகை ஆற்றில் சக்தி கரகம் மற்றும் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். நாளை காலை சக்தி அலங்காரம் நடைபெற்று, இரவு 6 மணியளவில் மகாமுனீஸ்வரர் கருப்புசாமி பூஜை நடைபெறுகிறது. கோவில் நிர்வாகிகள் சின்னமாயன், கலாராணி, சிவராஜா, மாசாணிராஜா, கங்கேஸ்வரி, சவுந்தரபாண்டியன் ஆகியோர் திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.