காங்கேயத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
காங்கேயத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
காங்கேயம்,:
காங்கேயம் அருகே உள்ள அழகேகவுண்டன் புதூரை சேர்ந்த வேலுசாமி என்பவரின் மகன் சுதாகர் (வயது 28). இவர் நிதி நிறுவனம் நடந்தி வந்தார். இந்த நிலையில். கடந்த சில மாதமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலுடன் இருந்து வந்துள்ளார். இதையறிந்த அவருடைய பெற்றோர் அவருக்கு ஆறுதல் கூறி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் சுதாகர் குளித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு அவருடைய அறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த சுதாகரின் பெற்றோர் சென்று அவரது அறை கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவை அவர் திறக்க வில்லை.
பின்னர் அவரது பெற்றோர், உறவினர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுதாகர் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.