பாரம்பரிய முறையில் மரம் வளர்க்கும் பணி தொடக்கம்
பள்ளியில் பாரம்பரிய முறையில் மரம் வளர்க்கும் பணி தொடங்கப்பட்டது.
உடையார்பாளையம்:
உடையார்பாளையம் வடக்கு நடுநலைப்பள்ளியில் பாரம்பரிய முறையில் மரம் வளர்க்கும் பணியின் தொடக்கமாக, மரக்கிளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஹரி.சுந்தர்ராஜ் தலைமை தாங்கி ேபசுகையில், சுற்றுச்சூழல் பசுமையாக இருக்க வேண்டியதன் அவசியம், மழை நீரை சேமிப்பது, மரம் வளர்க்க வேண்டியதன் கட்டாயம், ஓசோன் மண்டலம் ஆகியவற்றை பற்றி மாணவர்களுக்கு விளக்கி கூறினார். உடையார்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். இதில் உதவி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.