காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இதையொட்டி அழகப்பா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் வாகன விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.கண்காட்சிக்கு அழகப்பா கலைக்கல்லூரி முதல்வர் மீனா தலைமை தாங்கினார். அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கண்காட்சியை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் அழகர் முன்னிலையில் மாணவ-மாணவிகள் பார்வையிட்டு பயன் அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சித்ரா மற்றும் சிவகங்கை மாவட்ட சாலை பாதுகாப்பு படை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் மணிமாறன் ஆகியோர் செய்திருந்தனர்.