டிரைவரை தாக்கியவர் கைது
பூவந்தி அருகே டிரைவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
திருப்புவனம்,
அப்போது அங்கு வந்த பிரபாகரன், கோடாங்கிநாச்சி (26) ஆகிய இருவரும் சேர்ந்து மருதுபாண்டியை மண்வெட்டியாலும், கம்பாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த மருதுபாண்டி திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் பூவந்தி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் கோடாங்கிநாச்சியை கைது செய்தனர். பிரபாகரனை தேடி வருகின்றனர்.