தர்மபுரி மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-19 17:51 GMT
தர்மபுரி,

தர்மபுரியில் வக்கீல் சங்க நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் பாலு தலைமை தாங்கினார். செயலாளர் தருமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கடந்த 19-2-2009 அன்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்களை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வக்கீல்களை சமூக விரோதிகளின் தாக்குதலில் இருந்து காக்க வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இயற்ற வேண்டும் என்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நேற்று வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்