அரிசி ஆலை அலுவலகத்தில் திருடிய 3 வாலிபர்கள் கைது
சின்னசேலம் அருகே அரிசி ஆலை அலுவலகத்தில் திருடிய 3 வாலிபர்கள் கைது
சின்னசேலம்
சின்னசேலம் போலீசார் நேற்று மாலை கூகையூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த சின்ராசு(வயது 30), சங்கராபுரம் அருகே மாடம்பூண்டி, கூட்டுரோடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராமு(19), கடலூர் மாவட்டம் வேப்பூர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த அர்ஜூன்(23) என்பதும், கனியாமூர் பகுதியில் ஹேமநாதன் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை அலுவலகத்தின் பூட்டை உடைத்து செல்போன் மற்றும் பணத்தை திருடியதும் தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு அவர்களை கைது செய்த போலீசார் திருடிய செல்போன் மற்றும் ரூ.1,000 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.