கீழ்பென்னாத்தூர் அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கீழ்பென்னாத்தூர் அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கருங்காலிகுப்பம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் பவதாரணி (வயது 18), தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பவதாரணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.