வேப்பனப்பள்ளி அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

வேப்பனப்பள்ளி அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-02-19 05:43 GMT
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
உடல் நலக்குறைவு
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த சீலேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அச்சப்பன். இவருடைய மனைவி சீதம்மா என்கிற ஓசிவம்மா (வயது 70). இவர் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக ஓசூர் மற்றும் பெங்களூருவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். 
ஆனால் உடல் நலம் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த இவர் கடந்த 16-ந் தேதி காலை வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்த நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள கிருஷ்ணன் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் அவர் பிணமாக மிதந்தது தெரியவந்தது. 
தற்கொலை
இது குறித்து தகவல் கிடைத்ததும், வேப்பனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். 
உடல் நலக்குறைவால் மனம் உடைந்த மூதாட்டி சீதம்மா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்