ஆத்தூரில் தொடர் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் கைது
ஆத்தூரில் தொடர் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் கைது.
ஆத்தூர்,
சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டி ராஜ வீதியை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மகன் சரவணன் (வயது 36). இவர் சேலத்தில் உள்ள ஒரு தொழில் அதிபரிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழில் அதிபரை, சரவணனை சென்னை அழைத்து சென்று விட்டு, காரில் ஆத்தூர் வழியாக சேலம் திரும்பி கொண்டிருந்தார். வழியில் அவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. போதை அதிகமாகவே ஆத்தூரில் இருந்து நரசிங்கபுரம் உடையம்பட்டி செல்லும் வழியில் 5 மோட்டார் சைக்கிள் மீது தொடர்ந்து கார் மோதியது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து கார் டிைரவர் சரவணனை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர் விபத்தை ஏற்படுத்தி கார் டிரைவர் சரவணனை கைது செய்தனர். மேலும் அவர் பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்ததால், ஆத்தூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.