திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

யில் லாரியில் ஏற்பட்ட பழுது காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-02-18 22:11 GMT
தாளவாடி
தாளவாடியை அடுத்து உள்ளது திம்பம் மலைப்பாதை. இந்த மலைப்பாதை தமிழகம் - கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்து பாதையாக உள்ளது. அதனால் எப்போதும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். மேலும் திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த கொண்டை ஊசி வளைவுகளில் அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் திரும்ப முடியாமல் பழுதாகி ரோட்டில் நின்று விடுவது வாடிக்கையாகி விட்டது.  இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து மதுரைக்கு தவுட்டுப்பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதையின் 9-வது கொண்டை ஊசி வளைவில் லாரியை டிரைவர் திருப்பியபோது லாரி பழுதாகி ரோட்டில் நின்று விட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரியில் ஏற்பட்ட பழுது சரி செய்யும் பணி நடைபெற்றது. இரவு 7 மணி அளவில் பழுது சரிசெய்யப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து தொடங்கியது. திம்பம் மலைப்பாதையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

மேலும் செய்திகள்