சட்டவிரோதமாக மதுபானம் விற்றால் கடைக்கு ‘சீல்’

சட்டவிரோதமாக மதுபானம் விற்றால் கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று கலால்துறை துணை ஆணையர் சுதாகர் எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2021-02-18 21:06 GMT
புதுச்சேரி,

மதுபான ஆலை, மொத்த மற்றும் சில்லரை விற்பனை உரிமம் பெற்றவர்கள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகளின் உரிமைதாரர்கள் வருகிற தேர்தலில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த விளக்க கூட்டம் கலால்துறை அலுவலகத்தில்         நேற்று நடந்தது.  கூட்டத்துக்கு துணை ஆணையர் சுதாகர் தலைமை தாங்கினார். 

அப்போது அவர் பேசியதாவது:-

சட்டமன்ற தேர்தலில் மதுபான, சாராய மற்றும் கள்ளுக்கடைகள் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தேர்தல் விதிமுறையில் குறிப்பிடப்படும் காலத்தை மீறி  சட்டவிரோதமாக  மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு மீறினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும். தினமும் வரவு, செலவு கணக்குகளை    முறையாக    பரா மரிக்க வேண்டும்.

மதுபான கடைகள், சாராயம், கள்ளுக்கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். அனைத்து தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், பறக்கும்படை அதிகாரிகள், செக்டார் அதிகாரிகள் ஆகியோருக்கு கலால் ஆய்வாளர் அதிகாரம் வழங்கப்பட உள்ளது. எனவே அனைவரும் வரும் சட்டமன்ற தேர்தலை மிக நேர்மையான முறையில் நடத்த ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்