சிவகாசி,
சிவகாசி டவுன் போலீசார் சிறுகுளம் கண்மாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ராஜு (வயது 42), ராமானுஜம் (53), பழனிவேல் (48), மணிகண்டன் (34) ஆகியோர் காசு வைத்து சூதாடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சிராஜுதீன் அந்த 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.500-யை பறிமுதல் செய்தார்.