2 பேருக்கு 1 வருடம் ஜெயில்

ரேஷன் அரிசியை பதுக்கிய 2 பேருக்கு 1 வருடம் ஜெயில் தண்டனை விதித்து விருதுநகர் கோர்ட்டு தீர்பபு வழங்கியது.

Update: 2021-02-18 19:59 GMT
விருதுநகர்,
ரேஷன் அரிசியை பதுக்கிய 2 பேருக்கு 1 வருடம் ஜெயில் தண்டனை விதித்து விருதுநகர் கோர்ட்டு தீர்பபு வழங்கியது. 
ரேஷன் அரிசி பறிமுதல் 
விருதுநகர் முத்துராமன் பட்டியை சேர்ந்தவர்கள் ராஜமாணிக்கம் மற்றும் மாரியப்பன் ஆகியோர் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் ரேஷன் அரிசி பதுக்கியதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவர்களிடமிருந்து 21 மூடை ரேஷன்அரிசியை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
1 ஆண்டு ஜெயில் 
இந்த வழக்கிைன விசாரித்த இந்நகர் முதல் மாஜிஸ்திரேட்டு  மருதுபாண்டி, குற்றம் சாட்டப்பட்ட மாரியப்பன் மற்றும் ராஜ மாணிக்கத்துக்கு தலா ஒரு வருடம் ஜெயில் தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 

மேலும் செய்திகள்