சின்னசேலம் அருகே நெல் அறுவடை எந்திரம் மோதி பெண் பலி

சின்னசேலம் அருகே நெல் அறுவடை எந்திரம் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்

Update: 2021-02-18 16:45 GMT
சின்னசேலம்

சின்னசேலம் அருகே நமச்சிவாயபுரம், வடக்குத் தெருவை சேர்ந்தவர் சின்னக்கண்ணு மனைவி முத்தம்மாள்(வயது 60). இவர் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயியின் வயலுக்கு சென்று வரப்பு ஓரத்தில் உள்ள நெல் மணிகளை அறுவடை செய்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வயலுக்கு வந்த நெல்அறுவடை எந்திரம் பின்னோக்கி சென்றபோது பின்னால் இருந்த முத்தம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்தம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்