கடலூரில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம் திறப்பு

கடலூர், அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்தை கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்.

Update: 2021-02-18 16:00 GMT
கடலூர்,

கடலூர், அரியலூர் மாவட்டத்திற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மண்டல இணை ஆணையர் அலுவலகம் கடலூர் புதுப்பாளையத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார்.
விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு இணை ஆணையர் அலுவலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கான செயல்பாட்டு ஆணையும் வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

அன்னதான திட்டம்

தமிழக முதல்-அமைச்சர், சட்ட பேரவையில் 110 விதியின் கீழ் இந்து சமய அறநிலைத்துறையில் 9 இணை ஆணை யர் அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக கடலூர் மற்றும் அரியலூர் மாவட் டத்திற்கான மண்டல இணை ஆணையர் அலுவலகம் திறக்கப்பட்டது.
கடலூர் மண்டலத்தில் 3 ஆயிரத்து 113 கோவில்கள் உள்ளன. அன்னதானம் திட்டம் நிறைவேற்றி அதனை நடை முறைபடுத்திட 29 திருக்கோவில்களில் அன்னதானம் திட்டம் நடைபெற்று வருகிறது. இந்த அன்னதான திட்டத் தின் மூலம் ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர்.

ஒரு கால பூஜை

மேலும் இந்த மண்டலத்தில் 595 கோவில்களுக்கு ஒரு கால பூஜை நிதி உதவித்திட்டத்தின் கீழ் ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது. துறை ரீதியான ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் 65 கோவில் பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. கிராம கோவில் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 111 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப் பட்டு வருகிறது.
93 ஆதிதிராவிட கோவில்களுக்கு திருப்பணி நிதியுதவி திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.93 லட்சம் வழங் கப்பட்டுள்ளது. கிராமப்புற கோவில் திருப்பணி நிதி உதவி திட்டத்தின் கீழ் 57 கோவில்களுக்கு ரூ.57 லட்சம் வழங் கப்பட்டுள்ளது. 111 கிராம கோவில் பூசாரி நல வாரியம் மூலம் தலா ரூ.1000 வீதம் 1,469 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 69 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆலய மேம்பாட்டு நிதியில் இருந்து 412 திருக்கோவில் பணியாளர் களுக்கு சம்பள பாக்கி வழங்கப்பட்டு வருகிறது.

கும்பாபிஷேகம்

ஆகவே கோவில்களுக்கு திருப்பணி, கும்பாபிஷேகம், அன்பளிப்பு என வரும் கோப்புகளை உடனுக்குடன் அலுவலர்கள் கையெழுத்திட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

மேலும் செய்திகள்