திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா

13 பேருக்கு கொரோனா

Update: 2021-02-18 15:13 GMT
திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் தற்போது மேல்சிகிச்சைக்காக திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18ஆயிரத்து 198 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 223 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 14  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.தற்போது, 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 17,867 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
--------------

மேலும் செய்திகள்