திருப்பத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கான மனமகிழ் கூடம் தொடக்கம்.
திருப்பத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கான மனமகிழ் கூடம் தொடக்கம்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கான மனமகிழ் கூடம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, குழந்தைகள் நல அலுவலர் சுபாஷினி, எஸ்.ஆர்.டி.பி.எஸ். குழந்தைகள் காப்பக இயக்குனர் தமிழரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.