புதிய மின்னணு குடும்ப அட்டை

ஸ்ரீவில்லிபுத்தூரி்ல் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை அதிகாரிகள் வழங்கினர்.

Update: 2021-02-13 20:02 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூரி்ல் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை அதிகாரிகள் வழங்கினர்.  
மனு 
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. 
அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் குடும்ப அட்டை இல்லாதவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. 
விசாரணை 
அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில் ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 
இதில் தாசில்தார் சரவணன், வட்ட வழங்கல் அலுவலர் கோதண்டராமன் ஆகியோர் கலந்துகொண்டு ரேஷன் கார்டுகளை வழங்கினார்.
பொது முகாம் 
இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் கோதண்டராமன் கூறியதாவது:-
 மாவட்ட கலெக்டர் கண்ணன், சப்-கலெக்டர் தினேஷ்குமார், ஆகியோர் உத்தரவின் பேரில் திருநங்கைகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் மற்றும் பொது முகாம் இடையன்குளத்திலும் நடைபெற்றது. 
முகாமில் ஏராளமான மனுக்கள் வந்தது. வந்த மனுக்களின் மீது விசாரணை உடனடியாக நடந்தது. பின்னர் உடனே மூன்றாம் பாலினத்தவர்கள் 7 பேருக்கு புதிய குடும்ப அட்டைக்கான நகல் வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் மார்ச் 1-ந் தேதி முதல் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.
 இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்