திருநங்கைகள் ஸ்மார்ட் அட்டை பெற ஆன்லைன் பதிவு சிறப்பு முகாம்

திருநங்கைகள் ஸ்மார்ட் அட்டை பெற ஆன்லைன் பதிவு சிறப்பு முகாம் நடைபெற்றது

Update: 2021-02-13 17:37 GMT
கள்ளக்குறிச்சி, 

தமிழ்நாடு உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் திருநங்கைகள் ‘ஸ்மார்ட்’ குடும்ப அட்டை பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான சிறப்பு முகாம் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு குடிமைப்பொருள் தனி தாசில்தார் அனந்தசயனன் தலைமை தாங்கினார். முகாமில் கள்ளக்குறிச்சி தாலுகாவில் வசிக்கும் 20 திருநங்கைகள் தங்களது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் ‘ஸ்மார்ட்’ குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை கொடுத்தனர். இதில் 18 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது. சரியான ஆவணங்கள் இல்லாததால் 2 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்