அவினாசி, பிப்.14-
அவினாசி ஆட்டையாம்பாளையம் நால்ரோடு பகுதியிலிருந்து வேலாயுதம் பானையம் செல்லும் சாலை உள்ளது. இந்த ரோட்டில் நேற்று இரவு ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரெனரோட்டில் சிறிதளவு பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த கார் அந்த இடத்திலேயே நின்றுவிட்டது. உடனடியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் கார் பள்ளத்திலிருந்து மீட்கப்பட்டது. இதையடுத்து சில நிமிடங்களில் நடுரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த ரோட்டில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.