மாத்தூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மரகன்று

மாத்தூர் அரசு உயர்நிலை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மரகன்றுகளை வழங்கினார்

Update: 2021-02-13 16:50 GMT
கள்ளக்குறிச்சி, 

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி, சுற்றுச் சூழலின் அவசியம் குறித்து பேசினார். 

நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், தலைமை ஆசிரியை ஜான்சிராணி, உதவி ஆசிரியர் ராஜா மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். பள்ளிக்குத் தேவையான மரக்கன்றுகளை சஞ்சீவ்குமார், சசிகுமார், ராமலிங்கம் ஆகியோர் வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்