திருவண்ணாமலை; 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

Update: 2021-02-13 14:20 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

கொரோனா தடுப்பூசி 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 


மாவட்டத்தில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 10 அரசு மருத்துவமனைகள், 99 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 322 தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது.

இதில் பணிபுரியும் 17,206 சுகாதார பணியாளர்களுக்கு  கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் தமிழகத்தில் 2-வது தவணையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. 

முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கட்டாயமாக 2-வது தவணை தடுப்பூசியை 28 நாட்களுக்கு பிறகு செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

2-வது தவணை

அந்த வகையில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட டாக்டர்கள், செவிலியர்கள் என சுகாதார பணியாளர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மொபைல் மூலம் குறுந்தகவல் அனுப்பி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரம்பத்தில் 6 மையங்கள் செலுத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி தற்போது வட்டார மருத்துவமனைகளிலும் செலுத்தப்பட்டு வருகிறது. 

மேலும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட சுகாதார பணியாளர்கள் அதே மையத்தில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

இந்தநிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ துணை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீதர் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்