வாழப்பாடியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது
வாழப்பாடியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வாழப்பாடி:
வாழப்பாடியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருட்டு, வழிப்பறி
வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக் (வயது 25), மணிமாறன் (25). நண்பர்களான இருவர் மீதும், வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்தநிலையில், கடந்த மாதம் 10-ந்தேதி பேளூர் பிரிவு சாலை அருகே கூலித்தொழிலாளியான வாழப்பாடி கணபதி நகரைச்சேர்ந்த மணிகண்டன் என்பவரை வழிமறித்து ரூ.1,500-ஐ பறித்துச் சென்ற வழக்கில் வாழப்பாடி போலீசார் இருவரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இருவரும் தொடர்ந்து திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிகர் மூலமாக துணை சூப்பிரண்டு வேலுமணி, வாழப்பாடி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.
குண்டர் தடுப்பு சட்டம்
அதன்பேரில் கார்த்திக், மணிமாறன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்திட கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். இதனையடுத்து, ஏற்கனவே சேலம் மத்திய சிறையிலுள்ள இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.