வேலை வாய்ப்பு முகாமில் 24 பேருக்கு பணி ஆணை

வேலை வாய்ப்பு முகாமில் 24 பேருக்கு பணி ஆணை

Update: 2021-02-12 21:06 GMT
திருச்சி, 
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேற்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வேலைவாய்ப்பு மைய துணை இயக்குனர் கருணாகரன் தொடங்கி வைத்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பட்டதாரிகள் உள்பட 182 பேர் இதில் பங்கேற்றனர். 10 தனியார் நிறுவனத்தினர் கலந்துகொண்டு நேர்முக தேர்வை நடத்தினார்கள். அதில் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி கலைச்செல்வன் வழங்கினார்.

மேலும் செய்திகள்