மேலத்தானியம் முத்துமாரியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்

மேலத்தானியம் முத்துமாரியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

Update: 2021-02-12 17:54 GMT
காரையூர், பிப்.13-
காரையூர் அருகே உள்ள மேலத்தானியத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தை கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்