தனுஷ்கோடி கடல்பகுதியில் குவியும் கடல் புறாக்கள்

தனுஷ்கோடி கடல்பகுதியல் கடல்புறாக்கள் இரை தேட குவிந்து வருகின்றன.

Update: 2021-02-12 13:01 GMT
ராமேசுவரம், 
தனுஷ்கோடி கடல்பகுதியல் கடல்புறாக்கள் இரை தேட குவிந்து வருகின்றன.
கடல்புறாக்கள்
ராமேசுவரம் அருகே உள்ளது புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி கடற்கரை. இங்கு கடல் மற்றும் கடற்கரை பகுதிகளையே வாழிடமாக கொண்டு வாழ்ந்து வரும் பறவைகள் அதிக அளவில் உள்ளன. இதில் தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள மணல் திட்டுகளை வாழிடமாக கொண்டு அதிக அளவில் கடல் புறாக்கள் வாழ்ந்து வருகின்றன. 
இவ்வாறு மணல் திட்டுகளில் வாழ்ந்துவரும் கடல் புறாக்கள் பகல் நேரங்களில் தினமும்  தனுஷ்கோடி கம்பிபாடு, அரிச்சல் முனை மற்றும் எம்.ஆர்.சத்திரம் கடல் பகுதிகளில் கரைவலை மீன் பிடிப்பில் மீனவர்கள் ஈடுபட்டிருக்கும்போது மீன்களை சாப்பிட அந்த பகுதியில் கூட்டமாக குவிந்து விடுவது வழக்கம். 
பகல் முழுவதும் தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளில் சுற்றித்திரியும் கடல் புறாக்கள் அனைத்தும் இரவு நேரங்களில் மணல் திட்டுகளுக்கு சென்றுவிடும். இந்த நிலையில் தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவில் கடல் பகுதியில் நேற்று ஏராளமான கடல் புறாக்கள் குவிந்திருந்தன. இவை கடல் நீரின் மேலே பறந்தபடி மீனை வாயால் கவ்வி பிடித்து சாப்பிட்டன. 
புகைப்படம்
நீந்தியபடி விளையாடிக் கொண்டிருந்தன. இதை சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். கடல் புறாக்களோடு ஏராளமான வெள்ளை நிற கொக்கு மற்றும் நீர்க்காகங்களும் அங்கு இரை தேட குவிந்திருந்தன.

மேலும் செய்திகள்