சாலையில் திரியும் கால்நடைகளால் விபத்து

சாலையில் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுகிறது

Update: 2021-02-12 11:55 GMT
முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதிகளில் மக்கள் கால்நடைகளை சாலையில் திரிய விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதிகளில் சில மாதங்களாக கட்டவிழ்த்து விடப்படும் மாடுகள் ரோடுகளில் கண்டபடி சுற்றித் திரிகின்றன. பல இடங்களில் ரோட்டின் நடுவே படுத்துவிடுகின்றன. கூட்டமாக திரியும் மாடுகள் ஒன்றோடொன்று சண்டையிட்டு இருசக்கர வாகன ஓட்டுனர் களை முட்டித் தள்ளி விடுகின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.  முதுகுளத்தூர் பஸ் நிலையம், மருத்துவமனை மெயின் ரோடு உள்ளிட்ட  இடங்களில் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதற்கு பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்