மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் சாவு கட்டிட மேஸ்திரி கைது
மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் சாவு கட்டிட மேஸ்திரி கைது.
சேந்தமங்கலம்,
சேந்தமங்கலம் அருகே உள்ள பச்சடையாம்பட்டி புதூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 30). கட்டிட மேஸ்திரி. இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி அவர் மோட்டார் சைக்கிளில் தாலுகா அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது மோதினார். இதில் சாைலயை கடக்க முயன்றவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் செல்வம் சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார். காயமடைந்தவரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார். விசாரணையில், இறந்தவர் ெபாட்டணம் கிராமத்தை சேர்ந்த முருகையா (54) என தெரியவந்தது. இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டிட மேஸ்திரி வெங்கடேசனை கைது செய்தனர்.