சிமெண்டு, இரும்பு விலை உயர்வை கண்டித்து கட்டுனர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்;திருச்சியில் இன்று நடக்கிறது

திருச்சி, பிப்.12-
இந்திய கட்டுனர் சங்கத்தின் முன்னாள் அகில இந்திய துணை தலைவர் திரிசங்கு, கட்டுனர் சங்கத்தின் திருச்சி கிளை தலைவர் சரவணன் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- கடந்த 80 வருடங்களாக எங்களது கட்டுனர் சங்கம் மத்திய, மாநில அரசுகளுக்கும் கட்டுனர்களுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களில் சிமெண்டு மற்றும் இரும்பு விலை மிகவும் அதிகரித்து உள்ளது. சிமெண்டு மூட்டை ரூ.380-ல் இருந்து 480 ஆகவும், இரும்பு ஒரு கிலோ ரூ.45-ல் இருந்து ரூ.65 ஆகவும் எந்த காரணமும் இன்றி உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கட்டுமான தொழிலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே அகில இந்திய சங்கத்தின் அறிவுறுத்தல் படி இந்த விலை உயர்வை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சிமெண்டு மற்றும் இரும்பின் விலைக்கான ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும் வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.