மேலும் ஒருவர் கைது

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் ைகது செய்யப்பட்டார்.

Update: 2021-02-11 18:23 GMT
திருப்புவனம்,

திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாத்தூர் ஊராட்சி முன்னாள் தலைவர் கோபால்(வயது 60) தனக்கு சொந்தமான தென்னந்தோப்பில் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு குறித்து திருப்பாச்சேத்தி போலீசார் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இதுவரை 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சித்தலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்