மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கரூர்
திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 27). கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வேலை நிமித்தமாக தனது மோட்டார் சைக்கிளில் துறையூரில் இருந்து கரூருக்கு வந்து கொண்டிருந்தார். கரூர் உழைப்பாளி நகர் பகுதியில் அவர் வந்து கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சந்தோஷ்குமார் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் படுகாயமடைந்த சந்தோஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.