புதர் மண்டிய சுடுகாட்டை சீரமைக்க கோரிக்கை

புதர் மண்டிய சுடுகாட்டை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-02-11 18:11 GMT
நொய்யல்
கரூர் மாவட்டம் முத்தனூரில் இருந்து கவுண்டன்புதூர் செல்லும் சாலை அருகில் செல்வநகர் சுற்றுவட்டாரப் பகுதி பொது மக்களுக்காக சுடுகாடு உருவாக்கப்பட்டது. உடல்களை அங்கு உள்ள ஆஸ்பெட்டாஸ் கொட்டகையின் கீழ் எரித்து வந்தனர். புைதப்பவர்கள் அங்குள்ள நிலத்தில் புதைத்து வந்தனர். ஆனால் இந்த சுடுகாடு முழுவதும் செடி, கொடிகள் முளைத்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் சுடுகாட்டை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்