தொழிலாளியை கம்பியால் தாக்கியவர் கைது
தொழிலாளியை கம்பியால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கரூர்
கரூர் அருகே உள்ள புலியூரை சேர்ந்தவர் மதியழகன் (வயது 50). கூலித்தொழிலாளியான இவர், காரியாபட்டியை சேர்ந்த பழனிச்சாமி (39) என்பவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அப்போது மதியழகன் கையெழுத்திட்ட பாண்டு ஒன்றை பழனிச்சாமியிடம் கொடுத்துள்ளார். மதியழகன் தான் வாங்கிய ரூ.50 ஆயிரத்தை பழனிச்சாமியிடம் கொடுத்து விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கையெழுத்திட்ட பாண்டை மதியழகன் கேட்டுள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பழனிச்சாமி, மதியழகனை தகாத வார்த்தையால் திட்டி இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மதியழகன் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் டவுன்போலீஸ் இன்ஸ்பெக்டர் ெபரியசாமி வழக்குப்பதிந்து, பழனிச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.