வீட்டுமனை வழங்கக்கோரி மீனவர்கள் மனு

வீட்டுமனை வழங்கக்கோரி மீனவர்கள் மனு கொடுத்தனர்.

Update: 2021-02-11 17:30 GMT
கீழக்கரை, 
கீழக்கரை அருகே உள்ள சேதுக்கரை கடற்கரை பகுதியில் வசிக்கும் 80-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் அரசு புறம்போக்கு இடங்களிலும் தேவஸ்தானம் இடங்களிலும் பல தலைமுறையாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் உரிய ஆவணம் இன்றி வாழ்வதால் அரசின் எந்தவொரு நலத்திட்ட உதவிகளும் பெற முடியாமல் தவிக்கின்றனர். மேலும் வீடுகளில் மின் இணைப்பு பெறுவதற்கு உண்டான வழியில்லாமல் இரவு நேரங்களில் மாணவ-மாணவிகள் பாடம் கற்க மிக சிரமம் அடைந்து வருகின்றனர். அரசின் இலவச வீட்டுமனை திட்டத்தை மீனவ குடும்பங்களுக்கு வழங்கக்கோரி கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் சேதுகரை ஊராட்சி துணை தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் மீனவ மக்கள் முன்னிலையில் தாசில்தார் வீர ராஜாவிடம் மனு அளித்தனர்.மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டதாக அந்தபகுதி மக்கள் கூறினர். இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்தபகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்