கோயம்பேட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
கோயம்பேட்டில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
பூந்தமல்லி,
சென்னை கோயம்பேடு, தெற்கு மாதா தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 24). வாடகை கார் டிரைவர். இவர், தனது காரை வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் நிறுத்தி இருந்தார். நேற்று முன்தினம் இரவு திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
தனது காரை மர்மநபர்கள் திட்டமிட்டு தீ வைத்து எரித்துள்ளதாக கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் பச்சையப்பன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.