2017-18-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

2017-18-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-02-11 01:01 GMT
திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2017-18-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. அவர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும்.

கோரிக்கை மனு

நடப்பு கல்வி ஆண்டு வரை விடுபடாமல் அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஆனந்த், துணை செயலாளர் சந்தோஷ், நகர தலைவர் சுர்ஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்