ஆத்தூர் அருகே விபத்தில் முன்னாள் கவுன்சிலர் பலி

ஆத்தூர் அருகே விபத்தில் முன்னாள் கவுன்சிலர் பலியானார்.

Update: 2021-02-10 22:19 GMT
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே விபத்தில் முன்னாள் கவுன்சிலர் பலியானார்.
முன்னாள் கவுன்சிலர்
ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சி 10-வது வார்டு கல் உடைத்தான்மலை பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்கிற சர்க்கரை (வயது 58). முன்னாள் கவுன்சிலரான இவர் அ.ம.மு.க.வில் இருந்தார். 
கடந்த 6-ந் தேதி மாலை ஆத்தூர் பைத்தூர் ரோடு பகுதியில் சங்கர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த சரக்கு வேன் சங்கர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
பலி
இதில் படுகாயம் அடைந்த சங்கர் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். சங்கருக்கு லூர்துமேரி என்ற மனைவியும், 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். 
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்