ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே மங்காபுரத்தை சேர்ந்தவர் குருவையா. கூலி தொழிலாளி. இவரது மகன் பரமகுரு (வயது 17). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் இவன் பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. இது குறித்து பெற்றோர் கண்டித்ததை அடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.