அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கரூர்
போராட்டம் நடத்தி வரும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தஞ்சை கோட்ட துணைத்தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். கரூர் கிளை தலைவர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் செயலாளர் ஜெயபிரகாஷ், கரூர் கிளை 2 செயலாளர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.