பரமக்குடியில் சாலை பாதுகாப்பு மாத விழா
பரமக்குடியில் சாலை பாதுகாப்பு மாத விழா நடந்தது.
பரமக்குடி,
பரமக்குடியில் சாலை பாதுகாப்பு மாத விழா நடந்தது. இதையொட்டி பரமக்குடி போலீஸ் துணைசூப்பிரண்டு வேல்முருகன் பஸ் நிலையம், ஐந்து முனைப் பகுதி, ஆற்றுப்பாலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் ஆகியோருக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் அய்யப்பன் முன்னிலை வகித்தார்.வாகன ஓட்டுனர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது, வளைவுகளில் முந்தி செல்லக்கூடாது, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டக்கூடாது என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதில் போக்குவரத்து காவல்துறையினரும் நகர் போலீசாரும் கலந்துகொண்டனர்.