திருவள்ளூர் அருகே, பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-02-10 02:03 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள திருமழிசை குண்டுமேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சசிரேகா (வயது 19). இவர் திருமழிசை பஜாரில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் சசிரேகா வீட்டு வேலைகளை சரியாக செய்யவில்லை என அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சசிரேகா நேற்று முன்தினம் இரவு தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் ஆதிலட்சுமி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்