கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி தொடர்ந்து 4-வது நாளாக பெருந்துறை மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகள் போராட்டம்; வளாக அரங்கில் காத்திருப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு

கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி தொடர்ந்து 4-வது நாளாக பெருந்துறை மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-02-09 22:37 GMT
பெருந்துறை
கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி தொடர்ந்து 4-வது நாளாக பெருந்துறை மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
4-வது நாளாக...
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரி மாணவ- மாணவிகள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். 
அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து 4-வது நாளாக மாணவ- மாணவிகளின் போராட்டம் நேற்றும் நடைபெற்றது. 
முதல் 2 நாட்கள் கல்லூரி வாயிலின் வெளிப்புறத்திலும், 3-ம் நாள் கல்லூரி வளாகத்துக்குள்ளும் தர்ணா போராட்டத்தில் மாணவ- மாணவிகள் ஈடுபட்டனர். 
இந்த நிலையில் 4-வது நாளான நேற்று மாணவ- மாணவிகளின் தர்ணா போராட்டம் காத்திருப்பு போராட்டமாக மாறியது. 
காத்திருப்பு போராட்டம்
இதையொட்டி அவர்கள் கல்லூரியில் கலை அரங்கத்தில் உட்கார்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரும் வகையில் பேனர்கள் மற்றும் இதர கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை மாணவ- மாணவிகள் கையில் ஏந்தி தரையில் உட்கார்ந்திருந்தனர். இந்த போராட்டத்தால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்