ஜவுளிக்கடையில் தீப்பிடித்து எரிந்த ஜெனரேட்டர்
ஒட்டன்சத்திரத்தில் ஜவுளிக்கடையில் ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரத்தில், தாராபுரம் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஜவுளிக்கடை உள்ளது. இங்கு மின்சாரம் இல்லாதபோது, ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று மின்சாரம் இல்லாததால் கடையின் முன்பகுதியில் இருந்த ஜெனரேட்டர் இயக்கப்பட்டது.
அப்போது திடீரென ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள், தீயணைப்பான் கருவிகள் மூலம் தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து ஒட்டன்சத்தி்ரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் தீயில் கருகி ஜெனரேட்டர் சேதம் அடைந்தது. கடையின் வெளிப்பகுதியில் ஜெனரேட்டர் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, பல லட்சம் மதிப்பிலான துணிகள் தப்பின.
ஜவுளிக்கடையில் ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம், ஒட்டன்சத்திரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.