மீனாட்சி அம்மனுக்கு நாளை வைரகிரீடம்

மீனாட்சி அம்மனுக்கு நாளை வைரகிரீடம் அணிவிக்கப்படுகிறது

Update: 2021-02-09 20:51 GMT
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இணை கமிஷனர் செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை தினத்தில் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசம், வைரகிரீடமும், சுந்தரேசுவரர் சாமிக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்படும். அதன்படி இந்தாண்டு நாளை(வியாழக்கிழமை) தை அமாவாசை தினத்தன்று காலை 7 மணி முதல்10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் மூலவர் அம்மனுக்கு வைரகிரீடம், தங்ககவசம், சாமிக்கு வைர நெற்றிப்பட்டை அணிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்