மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது
மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது
அனுப்பர்பாளையம்:-
பல்லடத்தை அடுத்த வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 24). இவர் அந்த பகுதியில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். நேற்று காலை திருப்பூர் அவினாசி ரோடு அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பு அருகே உள்ள ஒரு கடை முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது அவருடைய மோட்டார்சைக்கிளை வாலிபர் ஒருவர் எடுத்து செல்ல முயற்சி சென்று கொண்டிருந்தார். இதையடுத்து காளீஸ்வரன் திருடன் திருடன் என்று கூச்சல் போட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சேர்ந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் நாகை மாவட்டம் கரைபாக்கம் பகுதியை சேர்ந்த முகமது அமீன் (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து முகமது அமீனை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். இதுகுறித்து காளீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.