கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் புற்றுக்கோவிலில் பிரதோஷ விழா

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் புற்றுக்கோவிலில் பிரதோஷ விழா கொண்டாடப்பட்டது.

Update: 2021-02-09 17:06 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்கசாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் பிரதோஷ விழா கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி நந்தியம ்பெருமானுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 
விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி, சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதேபோன்று கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா நேற்று மாலை சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சிவகலைபிரியா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்